துபை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா அவர்களின் மாமியார் ஜனாபா கதீஜா பீவி ( வயது 76 )  இன்று 04.07.2013 வியாழக்கிழமை மதியம் 12.45 மணிக்கு உடல் நலக் குறைவால் கும்பகோணத்தில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 05.07.2013 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கும்பகோணத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண் : 050

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, நர்சிங், பார்மஸி கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளி, அறிவியல் படிப்புடன் கூடிய மதரஸா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சமுதாய உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பொருளாளருமான அல்ஹாஜ் முனைவர் செ.மு. ஹமித் அப்துல் காதர் ( வயது 81 ) அவர்கள் அலுவல் நிமித்தமாக புது தில்லி சென்றிருந்தபோது 06.06.2013 வியாழக்கிழமை மாலை 6.48 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வஃபாத்தானார்.    (

துபை ஈமான் அமைப்பின் செய‌ற்குழு உறுப்பின‌ர் வி.க‌ள‌த்தூர் ம‌ர்ஹும் ஷாகுல் ஹ‌மீது ம‌றைவிற்கு ந‌டைபெற்ற‌ துஆ ம‌ஜ்லிஸ் ! துபை : துபை ஈமான் ம‌ற்றும் அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வையின் செயற்குழு உறுப்பின‌ர் வி.க‌ள‌த்தூர் ம‌ர்ஹூம் ஷாகுல் ஹ‌மீது அவ‌ர்க‌ளது ம‌ஃபிர‌த்திற்காக‌ துஆச் செய்யும் வித‌மாக‌ 28.04.2013 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை துபை தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) துஆ ம‌ஜ்லிஸ் ந‌டைபெற்ற‌து. ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ரும், அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌

துபை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளரும்,அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்களின் மாமனார் ஹாஜி ஹமீருத்தீன் அவர்கள் இன்று (09-04-2013) இரவு 11 மணியளவில் கும்ப‌கோண‌ம் அருகிலுள்ள‌ வானாதிராஜபுரத்தில் தாரும் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மறைந்த பெரியவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தினர்,உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ”ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்திக்கின்றோம். ஹாஜி ஹமீருத்தீன் அவர்களின் மறைவுக்கு துபை ஈமான்,மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிர்வாகிகள் தங்களின்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) – இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. துபை ஈமான் அமைப்பின் மீலாது விழா சிறப்புச் சொற்பொழிவாளராக இரண்டு முறை பங்கேற்ற்வர் அல்ஹாஜ் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத். அன்னாரது மறைவுக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி மற்றும் நிர்வாகிகள் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அன்னாரது

துபை ஈமான் அமைப்பின் சார்பில் துஆ மஜ்லிஸ்துபை ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது மறைவிற்கு துஆச் செய்யும் விதமாக 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் துபை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி )  துஆ மஜ்லிஸ் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்று அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு முதுவை ஹிதாயத் ஊடகத்துறை & மக்கள் தொடர்பு செயலாளர் : 056

TOP