துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஹிஜ்ரி புத்தாண்டு மற்றும் ஹாஜிகள் வரவேற்பு நிகழ்ச்சி 30.01.2006 திங்கட்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், ETA அஸ்கான் குழுமங்களின் நிர்வாக இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். மெளலவி எம் முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ழரி இஸ்லாமியப் புத்தாண்டு சிந்தனைகளை நினைவு கூர்ந்தார். இவ்வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள்

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) சார்பில் 17.12.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை ந‌ட‌த்திய‌து. துவ‌க்கமாக‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம் த‌லைமை தாங்கினார். பொதுச்செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஈமான் அமைப்பின் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

TOP