துபை ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ புனித‌ லைல‌த்துல் க‌த்ர் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி !

IMG_4978-300x224  க‌ல்விக்குழுத் த‌லைவ‌ர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லா த‌லைமை     வ‌கித்தார் !!

துபை :துபை ஈமான் அமைப்பின் ஏற்பாட்டில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சியினை 14.08.2012 செவ்வாய்க்கிழமை ( ஹிஜ்ரி 1433 ரமழான் பிறை 27 ) இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின் 10.30 மணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற்ற‌து.

துவ‌க்க‌மாக இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து. ஈமான் அமைப்பின் க‌ல்விக்குழுத்த‌லைவரும், துணைத்த‌லைவருமான‌ அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லா த‌லைமை வ‌கித்தார்.பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

 

IMG_5015-300x224ப‌ள்ளி இமாம் முஹ‌ம்ம‌து பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் கௌர‌விக்க‌ப்ப‌ட்டார்.

முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் சீருரை வழங்குகிறார். தோப்புவ‌ல‌சை மௌல‌வி முஹ‌ம்ம‌து சாதிக் சிற‌ப்புரை நிக‌ழ்த்தினார். புனித‌ லைல‌த்துல் க‌த்ர் இர‌வின் சிற‌ப்பிய‌ல்புக‌ளை விவ‌ரித்தார்.

சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற‌து.

பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்த‌து. நிறைவாக‌ அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர். நிக‌ழ்விற்கான‌ ஏற்பாடுக‌ளை ஊட‌க‌த்துறை ம‌ற்றும் IMG_5033-300x224ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், வி.க‌ள‌த்தூர் சாகுல், வி.க‌ள‌த்தூர் ஷ‌ர்புதீன், ஜ‌மால், முஹைதீன், முஹ‌ம்ம‌து முஸ்தபா, முபார‌க் அலி, இல்யாஸ், த‌மீம், ய‌ஹ்யா உள்ளிட்டோர் செய்திருந்த‌ன‌ர்.

 

 

 

 

 

 

ஆகஸ்ட் 14, துபை ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி

 

 

Lailath-notice-12-page-001-212x300

 

 

 

 

 

 

 

 

 

 

 

துபை : துபை ஈமான் அமைப்பின் சார்பில் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி 14.08.2012 செவ்வாய்க்கிழமை ( ஹிஜ்ரி 1433 ரமழான் பிறை 27 ) இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின் 10.30 மணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு அழைப்பாளர் தஞ்சாவூர் ஆற்றாங்கரை பள்ளி இமாம் மௌலவி அல்ஹாபிழ் செய்யிது அஹ்மது ஆலிம் மிஸ்பாஹி  சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.

முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் சீருரை வழங்குகிறார்.

சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகச்சிகள் நடைபெறும்.

பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் இப்புனித இரவின் நற்பயனை அடைய விழாவில் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு 055 800 79 09 / 050 51 96 433 எனும் அலைபேசியிலோ, info@imandubai.com எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

www.imandubai.com

Leave a Reply

TOP