துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி

00-300x199

 

துபாய் : துபாயில் ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் நோன்பாளிகளுக்கு பாரம்பர்ய தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வழங்கி வருகிறது.

இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்ததாவது ஈமான் அமைப்பு கடந்த 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கல்வி மற்றும் சமுதாய மேம்ப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமையிலும், துணைத்தலைவர்கள் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் மற்றும் எம். அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலிலும், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர்கள் காயல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹமீது யாசின், கல்விக்குழுச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஃப்தார் குழுவினர் கோவை இல்யாஸ், படேஷா பஷீர், வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, வி.களத்தூர் ஷர்புதீன், இஸ்மாயில் ஹாஜியார், ஜமால், முஹைதீன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நோன்புக் கஞ்சி ஆரம்ப காலத்தில் மிகச் சிறிய அளவில் ஆரம்பித்து தற்பொழுது தினமும் 3500 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கஞ்சி தயாரிக்கும் பணி கும்பகோணம் அன்வர் குழுவினரால் காலையில் ஆறு மணிக்கு துவங்கப்பட்டு நண்பகல் வரை தொடர்கிறது. அதன் பின்னர் அவை தனித்தனி கோப்பைகளில் ஊற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

நோன்புக் கஞ்சியுடன் பேரிச்சம் பழம், அரை லிட்டர் தண்ணீர், இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு, ஜுஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

இச்சேவை குறித்து பலரது கருத்துக்கள் இதோ :

தமிழகத்திலிருந்து அலுவலகப் பணியின் காரணமாக அமீரகம் வருகை புரிந்த கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகுமார் ஈமான் அமைப்பு அமீரகத்தில் தினமும் 3000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதை அறிந்து ரமலானின் முதல் நாள் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.

 

அவர் கூறியதாவது ஈமான் அமைப்பின் நிர்வாகிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டினார். அமீரகத்தில் தமிழக சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி ஏதோ தமிழகத்தில் இருப்பது போன்றதொரு உணர்வினை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

 

இனம், மதம், மொழி என்ற பேதமின்றி இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், அரபு நாட்டவர், பங்களாதேஷவர், ஆப்பிரிக்க நாட்டவர் என உலக நாட்டவர் அனைவரும் ஒருங்கிணைந்து உலக ஒற்றுமையினைப் பறைசாற்றும் நிகழ்வாக இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக மனம் நெகிழ குறிப்பிட்டார்.

 

நீக்ரோநாட்டைச்சேர்ந்தஒருதம்பதியினர்வரிசையாகபரப்பிவைக்கப்பட்டிருந்த  நோன்புதிறப்புஉணவுகளைப்பார்த்துசொன்னார் :

வெரிநைஸ்நோன்பாளிகளுக்குஇப்படிஉணவுதருபவர்களைஅல்லாஹ்விரும்புகிறான்!”

 

கல்லூரிமாணவியைப்போல்இருந்தஒருஇளம்பெண்அங்கேவரிசையாய்  நோன்புதிறக்கஉட்கார்ந்தவர்களைதனதுகேமராவில்போட்டோஎடுத்துக்கொண்டிருந்தார். அவரிடம்நீங்கயார்? ஏன்இதைபோட்டோஎடுக்கிறீர்கள்? என்பதைதெரிந்துகொள்ளலாமா?” எனக் கேட்ட போது  அதற்குஅந்தப்பெண்சொன்னபதில் :

 

நான்ஹாலந்துநாட்டைச்சேர்ந்தவள். என்பெயர்மோனிகாமுஸ்லீம்கள்ரம்ஜான்மாதத்தில்இறைவனைபிரார்த்தித்துஉணவுஉண்ணாமலும், தண்ணீர்பருகாமலும்நோன்புவைக்கும்இந்தசெயலும்நோன்புதிற்க்கும்போதுஏழை, பணக்காரன்என்றவித்தியாசம்இல்லாமல்இப்படிசரிசமமாகஉட்கார்ந்து  சாப்பிடுவதும்எனக்குரொம்பவும்பிடித்திருக்கிறதுஇதைஎன்நாட்டுமக்களுக்கும், என்உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்காண்பிப்பதற்காகவேபோட்டோஎடுக்கிறேன்!”

 

எதிரில்கடைவைத்திருந்தசகோதரசமுதாயத்தைச்சேர்ந்த  ஒருகடைஉரிமையாளர்சொன்னது :

நான்இங்கே 2 வருஷமாகஇந்தகடையைநடத்திவருகிறேன். ரம்ஜான்மாதத்தில்இந்தஈமான்அமைப்புஇப்படிஇந்தநோன்புதிறப்புநிகழ்ச்சியைப்பார்த்துநான்என்கடையில்வேலைபார்க்கும்இஸ்லாமியர்களுக்குஎன்செலவில்பழங்கள், பழரசங்கள், உணவுவாங்கிக்கொடுத்துஅவர்கள்நோன்புதிறப்பதற்கு  உதவிசெய்வதில்என்மனதுக்குஒருஆத்மதிருப்திகிடைக்கிறதுஅவர்களும்ரொம்பவும்மகிழ்ச்சிஅடைந்துஎன்மீதுஒருசகோதரபாசத்தைகாண்பிக்கிறார்கள். விசுவாசமாய்உழைக்கிறார்கள்!”

 

 

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் தங்கள் வீட்டு விஷேசத்தை செய்வதைப்போல் ஈடுபாட்டோடு செய்து வருகின்றனர்.

 

நோன்பு திறக்கும்போது வயிறு மட்டும் நிறையவில்லை… உறவுகளைப் பிரிந்து வந்த தொழிலாள தோழர்களுக்கு மனசும்தான் நிறைந்தது!

 

இப்பணிக்கு உதவுபவர்களுக்கு நிச்சயம் ஆண்டவனின் வெகுமதி உண்டு!

 

தகவல் உதவி :

திருச்சி சையது

 

[nggallery id=14]

Leave a Reply

TOP