துபாயில் த‌மிழ‌க‌ க‌ல்வியாள‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி!!

துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் த‌மிழ‌க‌ க‌ல்வியாள‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 07.02.2012 செவ்வாய்க்கிழ‌மை மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்றது. துவ‌க்க‌மாக‌ ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ரும், க‌ல்வி உத‌வித்தொகை வ‌ழ‌ங்கும் குழுவின் த‌லைவ‌ருமான‌ பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லா த‌லைமை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். துணைப்பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வ‌ருகை புரிந்துள்ள‌ சென்னைப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ அர‌பி மொழித்துறை பேராசிரிய‌ர் முனைவ‌ர் அன்வ‌ர் பாதுஷா உல‌வி, கும்ப‌கோண‌ம் அல் அமீன் மெட்ரிகுலேஷ‌ன் மேல்நிலைப்ப‌ள்ளி தாளாள‌ர் க‌மாலுதீன், முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ அற‌க்க‌ட்ட‌ளை செய‌லாள‌ர் மில்ல‌த் இஸ்மாயில் உள்ளிட்ட‌ க‌ல்வியாள‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. பொன்னாடை அணிவித்தும், நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கியும் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

முனைவ‌ர் அன்வ‌ர் பாதுஷா உல‌வி அவ‌ர்க‌ள் த‌ன‌து ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளில் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்துக் கொள்ப‌வ‌ர்க‌ள் எத்த‌கைய‌ சிற‌ப்புக்குரிய‌வ‌ர்க‌ள் என்ப‌த‌னை திருக்குர்ஆனை மேற்கோள்காட்டி விவ‌ரித்தார்.

ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ள் குறித்து பெருமித‌ம் தெரிவித்த‌ன‌ர். த‌ங்க‌ள‌து ப‌குதிக‌ளில் ஈமான் அமைப்பின் சார்பில் எத்த‌கைய‌ ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ வேண்டும் என்றாலும் அத‌ற்காக‌ அனைவ‌ரும் த‌ங்க‌ள‌து முழுமையான‌ ஒத்துழைப்பினை ந‌ல்குவ‌தாக‌ தெரிவித்துக் கொண்ட‌ன‌ர்.

நிக‌ழ்வில் ஊட‌க‌த்துறை ம‌ற்றும் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், விழாக்குழு செய‌லாள‌ர் கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின், ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் பூத‌ம‌ங்க‌ல‌ம் முஹைதீன், காய‌ல் சுலைமான் லெப்பை ஆலிம், க‌லீல் பிலாலி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

Leave a Reply

TOP