துபாயில் மார்க்க‌ அறிஞ‌ருட‌ன் க‌லந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ள் மார்க்க‌ அறிஞ‌ருட‌ன் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி 11.02.2012 ச‌னிக்கிழ‌மை மாலை நியூ ம‌ஹாராஜ‌ உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்விற்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ரும், க‌ல்விக்குழுத்த‌லைவ‌ருமான‌ அல்ஹாஜ் பி எஸ்.எம். ஹ‌பிபுல்லா த‌லைமை வ‌கித்தார். ஈமான் அமைப்பின் மீலாது சிற‌ப்புப் பேச்சாள‌ராக‌ வ‌ருகை புரிந்த‌ மௌல‌வி முனைவ‌ர் அன்வ‌ர் பாதுஷா உல‌வி அவ‌ர்க‌ளுட‌ன் ஈமான் நிர்வாகிக‌ள் க‌ல‌ந்துரையாடின‌ர்.

ஷ‌ரீஅத் ச‌ம்ப‌ந்த‌மான‌ ப‌ல்வேறு வினாக்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ ச‌ந்தேக‌ங்க‌ளை பெற‌ இச்ச‌ந்திப்பு உத‌வியாய் இருந்த‌து.

நிக‌ழ்வில் ஈமான் நிர்வாகிக‌ள் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி, துணைப்பொதுச்செய‌லாள‌ர் ஏ முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை ம‌ற்றும் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், விழாக்குழு செய‌லாள‌ர் கீழை ஹ‌மீது யாசின், முஹைதீன், அப்துல் ர‌சாக், ஃபைசுர், அன்வ‌ர் பாஷா, ப‌டேஷா ப‌ஷீர் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Leave a Reply

TOP