துபை ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய தூதர் பங்கேற்பு !

IMG_4614-300x224ஈமான் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுதீன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் !!

 

துபை : துபை ஈமான் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதம் முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ பள்ளிவாசலில் வழங்கி வருகிறது.

07.08.2012 செவ்வாய்க்கிழமை மாலை ஈமான் இஃப்தார் நிகழ்வில் இந்திய தூதர் திருமிகு எம்.கே. லோகேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு இஃப்தார் ஏற்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். மேலும் அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியினை வழங்கி வருவது பெருமைப்படத்தக்கது என்றார். இப்பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். அனைவருக்கும் தனது ரமலான் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் தனது வாழ்த்துரையில் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, துணைப் பொதுச்செயலாளர் அ. முஹம்மது தாஹா உள்ளிட்டோரின் மேற்பார்வையில் செயல்பட்டுவரும் செயலாளர்கள் யஹ்யா, முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், ஹிதாயத்துல்லா, இஃப்தார் குழுவினர் கோவை இல்யாஸ், படேஷா பஷீர், வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, வி.களத்தூர் ஷர்புதீன், கும்பகோணம் சாதிக், ஜமால்,முஹைதீன் உள்ளிட்ட குழுவினரைப் பாராட்டினார்.

துணைத்தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான கீழக்கரை அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தனது வாழ்த்துரையில் தமிழகத்து நோன்புக் கஞ்சியினை சுவைமிக்க வகையில் தயாரித்து வழங்கும் குழுவினரைப் பாராட்டினார்.

ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை சீனியர் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் தனது வாழ்த்துரையில் ஈமான் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணைப்பொதுச்செயலாளர் அ. முஹம்மது தாஹா ஆகியோர் தலைமையிலான செயல் வீரர்கள் பம்பரமாகச் சுழன்று கோடை வெயிலையும் பொருட்படுத்தாது சிறப்பான வகையில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவுகளை ஏற்படுத்தி வரும் பணி பாராட்டுத்தக்கது.

Leave a Reply

TOP