துபாய் ஈமான் அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம்

04-300x225துபாய்: துபாய் ஈமான் ( இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ) அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 24.06.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து.

செய‌ற்குழுக் கூட்ட‌த்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். இணைப் பொதுச்செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ முஹ‌ம்ம‌து தாஹா வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.
கூட்ட‌த்தில் க‌ல்வி உத‌வித்தொகை, ர‌ம‌லான் மாத செய‌ல்பாடுக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு விஷய‌ங்க‌ள் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து.
கூட்ட‌த்தில் ம‌க்க‌ள் தொட‌ர்பு ம‌ற்றும் ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், விழாக்குழு செய‌லாள‌ர்க‌ள் கீழை ஹ‌மீது யாசின், காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், க‌ல்விக்குழு செய‌லாள‌ர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் ம‌ற்றும் செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
01-300x225
02-300x225
03-300x225

Leave a Reply

TOP