ஈமான் அமைப்பின் செய‌ற்குழு உறுப்பின‌ர் வி.க‌ள‌த்தூர் ஷாகுல் ஹ‌மீது வ‌ஃபாத்து

by / Thursday, 25 July 2013 / Published in தற்போதைய செய்தி, வஃபாத்து
VKalathurShahulதுபை ஈமான் அமைப்பின் சார்பில் துஆ மஜ்லிஸ்துபை ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது மறைவிற்கு துஆச் செய்யும் விதமாக 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் துபை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி )  துஆ மஜ்லிஸ் நடைபெறும்
இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்று அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை & மக்கள் தொடர்பு செயலாளர் : 056 684 71 20
திண்டுக்கல் ஜமால் முஹைதீன்   : 055 800 79 09
அலுவலக மேலாளர்
கடையநல்லூர் ஹபிபுல்லாஹ் :   055 5653 738
செயற்குழு உறுப்பினர்

 

 

 

 

துபை ஈமான் அமைப்பின் செய‌ற்குழு உறுப்பின‌ர் வி.க‌ள‌த்தூர் ஷாகுல் ஹ‌மீது இன்று 27.04.2013 ச‌னிக்கிழ‌மை அதிகாலை திண்டுக்க‌ல்லில் ந‌ட‌ந்த‌ சாலை விப‌த்தில் வ‌ஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ அனைவ‌ரும் துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
க‌ட‌ந்த‌ 2011 ஆம் ஆண்டு காயிதேமில்ல‌த் பேர‌வை ச‌ர்வ‌தேச‌ ஒருங்கிணைப்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. த‌லைமையில் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌வ‌ர். இவ‌ருக்கு ம‌னைவி, ஒரு குழ‌ந்தை, தாய், ச‌கோத‌ரி ஆகியோர் இருக்கின்ற‌ன‌ர்.

ஈமான் ம‌ற்றும் அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வையின் ப‌ணிக‌ளில் த‌ன்னை முழுமையாக‌ ஈடுப‌டுத்திக் கொண்ட‌வ‌ர். தேரா ப‌குதியில் எந்த‌ப் ப‌ணியானாலும் அத‌னை நிறைவேற்றுவ‌தில் முன்னிலை வ‌கித்த‌வ‌ர். இவ‌ர‌து இழ‌ப்பு ஈமான் அமைப்புக்கும், அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வைக்கும் பேரிழ‌ப்பு என‌ ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி, அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வையின் பொதுச்செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா ஆகியோர் வெளியிட்டுள்ள‌ இர‌ங்க‌ல் செய்தியில் தெரிவித்துள்ள‌ன‌ர்.
காயிதேமில்ல‌த் பேர‌வை ச‌ர்வ‌தேச‌ ஒருங்கிணைப்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் எம்.பி., இனிய‌ திசைக‌ள் ஆசிரிய‌ர் முனைவ‌ர் பேராசிரிய‌ர் சேமுமு முஹ‌ம்ம‌த‌லி ஆகியோரும் சாகுல் ஹ‌மீது ம‌றைவுக்கு இர‌ங்க‌ல் தெரிவித்துள்ள‌ன‌ர்.
தொட‌ர்பு எண்க‌ள் :

மாம‌னார் நூருல்லாஹ் ஹ‌ஜ்ர‌த் தொட‌ர்பு எண் : 73 73 20 71 27
ஈமான் ஊட‌க‌த்துறை & ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் : முதுவை ஹிதாய‌த் : 00971 56 684 71 20

 

அன்பின் உறைவிடம், பண்பின் நிறைகுடம்

அமைதியின் கொள்ளிடம், ஆற்றலின் இருப்பிடம்
நட்பின் பெட்டகம், அமைதியின் பேராழம்
செயலில் உற்சாகம், சேவையில் பெருவேகம்
என்னருமைத் தம்பியே ஷாஹுல் ஹமீதே!
ஏனடா அவசரம்… முந்திச் சென்றாயே…
எமையெல்லாம் துயரக் கடலில் ஆழ்த்தியே!
அனைத்துமே அல்லாஹ்வின் நாட்டமே…
அறிவு பகர்ந்தாலும் இதயம் ஆறவில்லையடா…
ஆறுதலும் தேறுதலும் அல்லாஹ்விடமே…
ஆனாலும் உணர்வுப் பேராழிச் சுனாமியில்
உள்ளம் துரும்பாகத் தத்தளித்துத் தடுமாறுதடா…
எமைப் படைத்தவனே யா அல்லாஹ்…
உமையன்றி எமக்கு ஏது புகலிடம்?
உமையே தஞ்சம் அடைகிறோம்…
எம்விழி நிறை அருவியோடு..
இருகரம்  மிகை ஏந்தியே
இறைஞ்சுகிறோம் யா ரஹ்மானே..
எம் தம்பி ஷாஹுல் ஹமீது பிழை பொறுப்பாய்..
மறுமை நல் சுவனம் நனிசிறக்க அருள்வாய்…
தம்பியின் துணைவியார் துயர் துடைப்பாய்…
பிஞ்சுக் குழந்தைக்கும் முழுமுதல் பொறுப்பாவாய்..
பெற்றோருக்கும் உற்றோருக்கும்
உற்ற நட்பை இழந்து வாடும் எம்மனோருக்கும்
அழகிய பொறுமையை அளவிலாது நல்குவாய்…
கையறு நிலையில் கதி கலங்கு சூழலில்
வெறுமை மனதின் சூன்யச் சுற்றில்
இதையன்றி வேறென்ன மனிதரால்
செய்திடவியலும் இறைவா?…
காருண்யனே…அருள் புரிவாய்!
அன்பு,
சேமுமு
 professorsemumu@gmail.com

 

 

 

 

அஸ்ஸலாமு அலைக்கும்…
சமுதயாப் பணியாளர்களின் சதவிகிதம் குறைவாக இருக்கக்கூடிய ஒரு கால கட்டத்தில், ஆர்வம் மிக்க சமுதாயப் பணியாளர் சகோதரர்- ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்- வி.களத்தூர் ஷாஹுல் ஹமீது அவர்களை விபத்தொன்றின் மூலம் இழந்துவிட்டோம் என்பது மிகவும் வேதனையளிக்கிறது.
இன்னாலில்லாஹி…
அவருடைய பிழைகளைப் பொறுத்து அவரை பொருந்திக்கொள்ளவும்,
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைத் தந்தருளவும்,
அவர்களுடைய எதிர்கால வாழ்வுக்குரிய எல்லா அருளையும் பொழிந்து நம்பிக்கையூட்டவும்
 நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.
-ஏம்பல் தஜம்முல் முகம்மது.

newlightpdkt@gmail.com

 

INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON.MAY ALLAH FORGIVES ALL HIS SINS AND PROVIDE JANNATHUL FIRDOUZUL AALA AAMEEN.

Mohamed Salih Noohu Sahib

<noohusahib@hotmail.com>

 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Abdul Jabbar

abjabin@gmail.com

 

 

Shahulhameed1

Leave a Reply

TOP