மனித நேயப்பணிகளைச் செய்து வரும் துபாய் ஈமான் அமைப்பு : டாக்டர் ஏ. அமீர்ஜஹான் பாராட்டு

by / Friday, 26 July 2013 / Published in சேவைகள், மருத்துவம்

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு 04.02.2008 திங்கட்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக்கூடத்தில் ( அல் முதீனா லூலூ செண்டர் பின்புறம் ) ஆரோக்கிய அறிவியல் எனும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈமான் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். துவக்கமாக ஜாபர் சாதிக் இறைவசனங்களை ஓதினார். துணைத்தலைவர் அஹமது மொஹிதின் முன்னிலை வகித்தார்.

பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழகத்திலிருந்து வருகை புரிந்த பிரபல செக்ஸாலஜி நிபுணர் டாக்டர் ஏ. அமீர் ஜஹான் உடல்நலத்தின் இன்றியமையாமை குறித்து உரை நிகழ்த்தினார். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் மனிதநேயப் பணிகள் குறித்து பாராட்டினார். ஒரு காலத்தில் கிழக்கைப் பார் எனும் முழக்கம் ஏற்பட்டிருந்தது. தற்பொழுது அமீரகம் மற்றும் வளைகுடாவில் ஏற்பட்டு வரும் மகத்தான வளர்ச்சி மேற்கைப் பார் எனும் முழக்கம் ஏற்பட வழிவகுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று தங்களது ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். ஆயுளைக் குறைக்கும் ஆயிலை ( எண்ணெய் ) உணவுப் பொருட்களில் குறைத்து சாப்பிட வேண்டும். நல்லவை நடக்க நாம் தினமும் காலாற நடக்க வேண்டும் என்றார். உணவில் காய்கற் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகள் நம் வாழ்வின் ஆயுளை அதிகரிக்கும் என்றார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் ஏ. நஸீருல் அமீன் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின், ஷேக் முஹம்மது உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Leave a Reply

TOP