பிப்ரவரி 3, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மாபெரும் மீலாத் பெருவிழா

by / Friday, 26 July 2013 / Published in நிகழ்வுகள், மீலாத்

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு உலகத்தை உய்விக்க வந்த உத்தமத் திருநபியின் உதய தின விழாவாம் மீலாத் பெருவிழாவினை 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணிக்கு லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்த இருக்கிறது.

ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமை வகிக்கிறார்.

துபாய் இஸ்லாமிய விவகாரத்துறையின் துணை இயக்குநர் முனைவர் உமர் எம். அல் கத்தீப் முன்னிலை வகிக்கிறார்.

ஈமான் பொதுச்செயலாளார் குத்தாலம் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

விழாப் பேருரையினை தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் இணைச் செயலாளர், மூன் டிவி புகழ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி நிகழ்த்த் இருக்கிறார்.

பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாக துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.

அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து நற்பயன் அடைய விழாக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 055 800 79 09 / 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Meelad-notice-12-page-0011

Leave a Reply

TOP