சொல்ல நினைத்ததை மின்னஞ்சலில் சொல்லி முடிக்கிறேன்

by / Friday, 26 July 2013 / Published in ஆண்டு விழா, நிகழ்வுகள்

(ஹாஜி நல்லகனி காஜாமுகையதீன் M.A, MED. காரைக்குடி )

கண்ணியமிக்க ”ஈமான்” உடன்பிறப்புகளே !  எல்லாம் வல்ல ‘அல்லாஹ்’ நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ! 02.12.2010 அன்று ஈமானின்   35 வது ஆண்டு விழாவிலும் அமீரகத்தின் 39 வது தேசிய நாள் கொண்டாட்டத்திலும் விசிட் விசாவில் வந்த எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே நன்றி சொல்ல வேண்டும். இது என் வாழ்வில் கிடைத்த பொன்னான அனுபவம். கடல்கடந்து பொருளீட்ட வந்துள்ள இந்தியக்குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சங்கமித்த பசுமையான இனிய நிகழ்வு.

ஈமானின் தலைவர் E.T.A அஸ்கான் குரூப்பின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்களின் தலைமையுறையில் ஐந்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன விடை? பூஜ்ஜியத்தை ஐந்தால் வகுத்தால் என்ன விடை? என்று வினவி அதற்குரிய விடைகளை மாம்பழக்கணக்கால் விளக்கியது மிகமிக அருமையாக இருந்தது.

துணைத்தலைவர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் M.P.அவர்களின் துடிப்பான பேருரையில் நமது சமுதாயப் பணிகளின் சாதனையைக்கூறி சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளையும் நினைவு கூர்ந்து தொடர்ந்து ஈமானின் ஈடுபாட்டுடன் இருப்பதையே விரும்புவதாகக் கூறியது ஈமானின் மீது தமக்கிருக்கும் ஈமானைக் காட்டியது.

ETA Executive Director அன்வர்பாட்ஷா அவர்கள், K.M.அஹமது முகைதீன் அவர்கள், M.A. அப்துல் கதீம் அவர்கள், பொதுச்செயலாளர் குத்தால்ம் அல்ஹாஜ் லியக்கத் அலி அவர்கள் கல்வித்துறை செயலாளர்  A. முஹம்மது தாஹா மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளருமான முதுவை ஹிதாயத்துல்லா போன்ற ஈமானின் பொறுப்பாளர்கள் சுறுசுறுப்பாய் வேலை செய்து உணவு, விளையாட்டுப்போட்டிகள் பரிசளிப்பு முதலிய எந்த நிகழ்விலும் சோடை போகாதவாறு கச்சிதமாக நிறைவுபெறச் செய்தது அவர்களின் திட்டமிட்ட மதியையும், அனுபவத்தையும் பறை சாற்றுகிறது.

ஈமானின் கல்விப்பணியைப் பற்றி நாடே அறியும் பயன்பெற்ற குழந்தைகளின் குடும்பங்களின் துஆக்கள் ஈமானை மென்மேலும் வலுவடையச்செய்யும்.

ஈமான் இனி ஆற்ற வேண்டிய பணிகள் / திட்டங்களைப் பற்றிய எனது கருத்துக்களை உங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

1.தமிழ்நாட்டில் வாழும் நமது சமுதாய மாணவ/ மாணவிகளுக்கு இந்தி மொழி மற்றும் அரபி மொழியில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயிற்சி நிலையங்கள் உருவாக்க ஆவண செய்ய வேண்டும்.

2.புரபெஸ்ஸனல் ட்ரெய்னிங் (தொழில் சார்ந்த பயிற்சிகள்)  வல்லுநர் குழு அமைப்பது குறித்து (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெடிக்கல் பாராமெடிக்கல், டூரிஸம், கேட்டரிங், ஹோட்டல் மேனெஜ்மென்ட்) போன்றவற்றில் வெளிநாட்டில் வேலை வாய்ப்புள்ள சர்டிபிகேட், டிப்ளோமா, மற்றும் பயிற்சி சான்றிதழ் போன்றவற்றிற்கு தனித்தனியாக வல்லுனர்களிடம் கருத்துக்களைச் சேகரித்து அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயிற்சி நிலையங்களைத் தமிழ்நாட்டில் நிறுவ ஆவண செய்ய வேண்டும்.

கேரளாவில் PROFESSIONAL TRAINING உள்ளது.

10 வது S.S.L.C. பயின்றவர்களுக்கு

12 வது  H.S.C. பயின்றவர்களுக்கு

DIPLOMA       பயின்றவர்களுக்கு

I.T.I           பயின்றவர்களுக்கு

பட்டம்         பெற்றவர்களுக்கு

தொழில் படிப்புகளில் பட்டம் பெற்ற பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு வெளிநாடுகளில் தேவைப்படுகின்ற பயிற்சியினை வழங்கிகிறார்கள்.

அதேபோல் நாமும் வல்லுனர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அதற்கான இடங்களையும் ஏற்பாடுகளையும் நான் முன்னின்று செய்து தர இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

3. தமிழ்நாடு வக்ப் வாரியத்தலைமை மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் ஊர் ஜமாத்தார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஈமானின் திட்டங்களை இணைக்க விரும்புகிறேன்.

எடுத்துக்காட்டாக

ஏறத்தாழ புதுக்கோட்டை மாவட்டத்தில் NH47 சாலையில் 60 ஏக்கர் தர்ஹா இடம் இருக்கிறது. சிவகெங்கை மாவட்டத்தில் 250 ஏக்கர் தர்ஹா நிலங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் பங்களிப்போடு ஈமானின் உறுதுணையோடு உள்ளூர் ஜமாத்தார்களின் அரவணைப்போடு அறக்கட்டளைகளை நிறுவி அவற்றின் மூலம் கல்வி நிறுவனங்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் மொழிப்பயிற்சி நிலையங்கள் உருவாக ஈமான் ஒத்துழைப்பு, உதவி, மற்றும் ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்க வழங்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.

நிறைவாக  வாழுகின்ற பூமியை வளம் கொழிக்கச் செய்து உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளப்பெறச் செய்து அமீரகத்தையும் அதன் உலக அதிசயமான திட்டங்களையும் வெற்றியடையச் செய்ய வேண்டுமாய் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆச் செய்கிறேன்.

ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

தங்கள் அன்புள்ள ஆசிரியர்

நன்றி

ஹாஜி நல்லகனி காஜி முகையதீன் M.A, M.Ed

5/18 வைரவன் குறுக்கு சந்து, கழனிவாசல், காரைக்குடி -2

சிவகெங்கை மாவட்டம்   – PIN 630002

தொலைபேசி எண்   – 91 4565255476

கைபேசி எண்        – 919443609633

Leave a Reply

TOP