ஜுலை 4, துபாயில் புனித‌ ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

by / Friday, 26 July 2013 / Published in நிகழ்வுகள், பராஅத் இரவு

துபாய் : துபாய் ஈமான் ( இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ) அமைப்பு புனித‌ ப‌ராஅத் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை 04.07.2012 புத‌ன்கிழ‌மை ம‌ஃரிப் தொழுகைக்குப் பின்ன‌ர் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா தெரிவித்துள்ளார்.

 

ம‌ஃரிப் தொழுகைக்குப் பின்ன‌ர் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்ய‌ப்ப‌டும். முத‌லாம் யாசின் ஸ‌லாம‌த்தான‌ நீண்ட‌ ஆயுளுக்காக‌வும், இர‌ண்டாம் யாசின் ப‌லா முசீப‌த் க‌ஷ்ட‌ ந‌ஷ்டங்க‌ள் நீங்கிட‌‌வும், மூன்றாம் யாசின் ரிஸ்க் விஸ்தீர‌ண‌ம் வேண்டியும் துஆ செய்ய‌ப்ப‌டும்.

 

அனைவ‌ரும் க‌ல‌ந்து இப்புனித‌ இர‌வின் ந‌ற்ப‌ய‌னை அடைய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Leave a Reply

TOP