துபாய் லூத்தா ப‌ள்ளியில் ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

by / Friday, 26 July 2013 / Published in நிகழ்வுகள், பராஅத் இரவு

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பின் சார்பில் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் 26.07.2010 திங்க‌ட்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெற்ற‌து.

ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம்.ஏ. அப்துல் க‌த்தீம் அவ‌ர்க‌ள் த‌லைமை தாங்கினார். க‌ல்விக்குழு உறுப்பின‌ர் கீழை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். காய‌ல் நூஹு சாஹிப் ந‌பி புக‌ழ் பாடினார்.

க‌ல்விக்குழு செய‌லாள‌ர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

காய‌ல் ந‌ஹ்வி இஸ்ஹாக் லெப்பை ஆலிம் ம‌ஹ்ள‌ரி புனித‌ ப‌ராஅத் இர‌வின் சிற‌ப்புக‌ள் குறித்து சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார்.

ஊட‌க‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார். நிக‌ழ்ச்சியினை ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா தொகுத்து வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்வில் த‌மிழக‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

 

13

 

 

31

 

21

 

 

41

 

 

51

 

barath10

 

 

 

Leave a Reply

TOP