ஈமான் அமைப்பு நடத்திய ஹிஜ்ரி புத்தாண்டு ஹாஜிகள் வரவேற்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஹிஜ்ரி புத்தாண்டு மற்றும் ஹாஜிகள் வரவேற்பு நிகழ்ச்சி 30.01.2006 திங்கட்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், ETA அஸ்கான் குழுமங்களின் நிர்வாக இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மெளலவி எம் முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ழரி இஸ்லாமியப் புத்தாண்டு சிந்தனைகளை நினைவு கூர்ந்தார்.

இவ்வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சார்பாக அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் ஏற்புரை நிகழ்த்தினார். தன்னுடைய் ஹஜ் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் அனைவரும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள், ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

TOP