துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

by / Friday, 26 July 2013 / Published in நிகழ்வுகள், பராஅத் இரவு

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜ்ரி 1430 ஷ அபான் பிறை 15, 05.08.2009 புதன் மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) சிறப்புற நடத்தியது

மஃரிபு தொழுகைக்குப் பின்னர் நடத்திய முதல் அமர்வில் மூன்று முறை யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. முதலாம் யாசீன் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலா முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் துஆ செய்யப்பட்டது.

இரண்டாம் அமர்வு இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது. இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் கத்தீம் தலைமை வகித்தார். ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி, மவ்லவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ழரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றி கூறினார்.

பயானுக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

TOP