துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

by / Friday, 26 July 2013 / Published in நிகழ்வுகள், மீலாத்

துபாய் ஈமான் அமைப்பு ( www.imandubai.org ) 06.03.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் மீலாத் பேச்சுப் போட்டியினை நடத்த இருக்கிறது.

அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை,எளிமை,எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒரு துணைத் தலைப்பில் உரை நிகழ்த்தலாம்.

போட்டியில் வெற்றிபெறுவோருக்கு துபாய் – சென்னை – துபாய் செல்ல எமிரேட்ஸ் விமான பயணச்சீட்டும், லேண்ட்மார்க் ஹோட்டல் வழங்கும் எட்டு கிராம் தங்க நாணயமும், அல் மஷ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரங்கள் மூன்று நபருக்கும், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் வழங்கும் திர்ஹம் ஆயிரம் பரிசுக் கூப்பனும், இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 க்கான பரிசுக் கூப்பனும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் திர்ஹம் 200 க்கான பரிசுக் கூப்பன் பத்து பேருக்கும் வழங்கப்படும்.

போட்டியாளர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம். போட்டியாளர் அரங்கினுள் 15 நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 28 பிப்ரவரி 2009

மேலதிக விபரங்களுக்கு : 050 51 96 433 / 050 467 4399 / 050 58 53 888 / 050 2533 712

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ.

Leave a Reply

TOP