துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ புனித‌ மிஃராஜ் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி!!

by / Saturday, 27 July 2013 / Published in நிகழ்வுகள், மிஃராஜ் இரவு

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித‌ மிஃராஜ் இரவினையொட்டி சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியினை தெய்ரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் 19.07.2009 ஞாயிற்றுக்கிழ‌மை இர‌வு ந‌ட‌த்திய‌து.

புனித‌ மிஃராஜ் சிறப்பு நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் கூத்தாந‌ல்லூர் அஹ‌ம‌து முஹைதீன் த‌லைமை வ‌கித்தார். ம‌வ்ல‌வி க‌லீலுர் ர‌ஹ்மான் பிலாலி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

ஈமான் அமைப்பின் ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். க‌ல்வித்துறை செய‌லாள‌ர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் சிற‌ப்புப் பேச்சாள‌ர் அலி அஸ்க‌ருக்கு பொன்னாடை அணிவித்து கௌர‌வித்தார்.

ம‌வ்ல‌வி அலி அஸ்க‌ர் பிலாலி புனித‌ மிஃராஜ் இர‌வின் சிற‌ப்புக்க‌ளை விவ‌ரித்தார். ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார்.

நிக‌ழ்ச்சியினை ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா தொகுத்து வ‌ழ‌ங்கினார். அத‌னைத் தொட‌ர்ந்து பாம்புகோவில்ச‌ந்தை ம‌வ்ல‌வி ஹ‌னீஃப் ம‌ன்பஈ த‌வ்பா தொழுகை ந‌ட‌த்தினார். துஆவிற்குப் பின்ன‌ர் நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

த‌க‌வ‌ல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

 

PIC_1495

PIC_1496
PIC_1500

Leave a Reply

TOP