துபை ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்களின் மாமனார் வ‌ஃபாத்து

by / Thursday, 01 August 2013 / Published in வஃபாத்து

துபை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளரும்,அமீரக காயிதெமில்லத் பேரவையின்
தலைவருமான குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்களின் மாமனார் ஹாஜி ஹமீருத்தீன் அவர்கள் இன்று (09-04-2013) இரவு 11 மணியளவில் கும்ப‌கோண‌ம் அருகிலுள்ள‌ வானாதிராஜபுரத்தில் தாரும் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மறைந்த பெரியவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தினர்,உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ”ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்திக்கின்றோம்.

ஹாஜி ஹமீருத்தீன் அவர்களின் மறைவுக்கு துபை ஈமான்,மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிர்வாகிகள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க அல்ஹாஜ் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தாயகம் விரைந்துள்ளதாக துபை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செய‌லாள‌ரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொதுச் செயலாளருமான‌ ஏ.முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.

குத்தால‌ம் லியாக்க‌த் அலி இந்திய‌ தொட‌ர்பு எண் : 944 527 8616

ஏ.முஹ‌ம்ம‌து தாஹா தொட‌ர்பு எண் : 00971 50 467 43 99

Leave a Reply

TOP