துபை ஈமான் அமைப்பின் செய‌ற்குழு உறுப்பின‌ர் வி.க‌ள‌த்தூர் ம‌ர்ஹும் ஷாகுல் ஹ‌மீது ம‌றைவிற்கு ந‌டைபெற்ற‌ துஆ ம‌ஜ்லிஸ் !

by / Thursday, 01 August 2013 / Published in வஃபாத்து

துபை ஈமான் அமைப்பின் செய‌ற்குழு உறுப்பின‌ர் வி.க‌ள‌த்தூர் ம‌ர்ஹும் ஷாகுல் ஹ‌மீது ம‌றைவிற்கு ந‌டைபெற்ற‌ துஆ ம‌ஜ்லிஸ் !
துபை : துபை ஈமான் ம‌ற்றும் அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வையின் செயற்குழு உறுப்பின‌ர் வி.க‌ள‌த்தூர் ம‌ர்ஹூம் ஷாகுல் ஹ‌மீது அவ‌ர்க‌ளது ம‌ஃபிர‌த்திற்காக‌ துஆச் செய்யும் வித‌மாக‌ 28.04.2013 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை துபை தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) துஆ ம‌ஜ்லிஸ் ந‌டைபெற்ற‌து.

ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ரும், அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி, பொதுச்செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, பொருளாள‌ர் கீழ‌க்க‌ரை எஸ்.கே.எஸ். ஹ‌மீதுர் ர‌ஹ்மான், ஈமான் ஊட‌க‌த்துறை ம‌ற்றும் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செய‌லாள‌ர்க‌ள் காய‌ல் யஹ்யா, கீழை ஹ‌மீது யாசின், க‌ல்விக்குழு செய‌லாள‌ர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லா, ஈமான் ம‌ற்றும் அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வை நிர்வாகிக‌ள், வி.க‌ள‌த்தூர் ஜ‌மாஅத் நிர்வாகிக‌ள் உள்ளிட்டோர் இந்நிக‌ழ்வில் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

எதிர்பாராத‌ வித‌மாக‌ ஏற்ப‌ட்டுள்ள‌ சாகுல் ஹ‌மீது இழ‌ப்பு குறித்து உண‌ர்வுப் பூர்வ‌மாக‌ கீழை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் விவ‌ரித்தார். த‌ங்க‌ள் குடும்ப‌த்தில் ஒரு ச‌கோத‌ர‌னை இழ‌ந்த‌து போன்ற‌ ஒரு உண‌ர்வினை ஏற்ப‌டுத்தியுள்ள‌தாக‌ ப‌ல‌ரும் க‌ண்ணீர் ம‌ல்க‌ த‌ங்க‌ள‌து இர‌ங்க‌லை தெரிவித்த‌ன‌ர்.

த‌ஞ்சை ஹாபிஸ் ஷேக் தாவூது துஆ செய்தார்.

 

Shahulhameed1

Leave a Reply

TOP