பேராசிரியர் முனைவர் சேமுமு வாழ்த்து !

by / Thursday, 01 August 2013 / Published in வாழ்த்துரை

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)

துபை – ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இறையருளால் வருகிற 02-12-2011 அன்று நடைபெறவிருப்பது பேருவகையை அளிக்கிறது.

.6          அயலக மண்ணில் அதிலும் அமீரகத்தில் ஓர் அமைப்புதனை உருவாக்கி    ஓராண்டல்ல, ஈராண்டல்ல 36 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திவருவதென்பது பென்னம்பெரிய சாதனையாகும்.

தாயகத்தில் கல்வியைத் தொடரமுடியாது ஏழ்மையில் உழலும் எண்ணற்ற மாணவ, மாணவியருக்குக் கல்வி நிதி வழங்கிப் பேரொளி நல்கும் அமைப்பாக-வறுமையில் வாடும் எண்ணற்றோர் வாழ்வில் வளம் காணத் தக்க வகைகளில் பேருதவிகள்

பல உரிய முறைகளில் நல்கிடும் பேரமைப்பாக-

புலம் பெயர்ந்து வந்தோருக்குச் சிக்கல்கள் ஏற்படின்

ஓடோடிச் சென்று உதவும் உறுதுணை அமைப்பாக-

தாயக விருந்தினரைத் தாயுள்ளத்தோடு வரவேற்று

வாழ்த்தி அரவணைக்கும் பாசம் நிறை அமைப்பாக-

ரமளான் காலத்தில் தாயக நோன்புக் கஞ்சியை

ஆயிரக்கணக்கானோர் வயிறு குளிர வழங்கி

மகிழும் இறைப் பணி அமைப்பாக-

சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் அர்ப்பணிப்பு

உள்ளத்தோடு அரிய பணிகள் ஆற்றும் அமைப்பாக-

ஈமான் அமைப்பு கணக்கில் அடங்காத் தொண்டுகள்

புரிந்து வருவது போற்றிப் புகழ்வதற்கும்

பாராட்டி வாழ்த்துவதற்கும் உரியதாகும்.

ஈமானின் வெற்றிக்கு இணையிலாப் பங்கேற்றுத்

தகைமையுடன் வழிநடத்தும் அனைத்துத்

தகுதிகளும் ஒருங்கே அமைந்த சான்றாண்மைமிக்க

பெருமிதத்திற்குரிய அருமைத் தலைவர்

அல்ஹாஜ் செய்யிது எம்.ஸலாஹுத்தீன் அவர்களுக்கும்

சமுதாயச் சேவையில் தனிச் சுகம் காணும் ஆற்றல்மிகு

செயலாளர் அன்புச் சகோதரர் அல்ஹாஜ்

குத்தாலம் லியாகத் அலி அவர்களுக்கும்

பொதுநல வாழ்வில் புதுப் பொலிவு காணத்

துடிப்புடன் செயலாற்றும் ஏனைய நிர்வாகிகள்

மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும்

மனமார்ந்த நன்றியுடன் கூடிய

பாராட்டுதலையும் வாழ்த்துதலையும்

சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்வடைகிறோம்.

ஈமான் அமைப்பு இறையருளால்

சாதனைகள் பல மென்மேலும் படைத்திட

வல்ல இறையவனை இருகரமேந்தித்

துஆ செய்து வாழ்த்துகிறோம்.

வாழ்க… வளர்க…

வஸ்ஸலாம்,

அன்பு,

சேமுமு.

(பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி,

பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்.

ஒருங்கிணைப்பாளர், சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு.

ஆசிரியர், “இனிய திசைகள்” மாத இதழ்.)

Leave a Reply

TOP