துபை ‘ஈமான்’ விழா ( டிசம்பர் 2012 )

by / Thursday, 01 August 2013 / Published in வாழ்த்துரை

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஞாயிறு துபை ‘ஈமான்’ அமைப்பின் 37-வது ஆண்டு விழா.
அத்துடன் அமீரக தேசீய தின விழாவும் ! இது பாராட்டப்பட
வேண்டிய ஒரு விஷயம்முக்கிய பொறுப்பாளர்களான ஜனாப்கள்
லியாக்கத் அவர்களும் தாஹா அவர்களும் என்னைப் பார்க்க
வீட்டுக்கு வந்திருந்த போது விழாவில் கவசியம் கலந்து கொள்ள
வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்கள்.

அன்றோடு விசா முடிகிறது.அதற்கு மேல் ஒருநாள் தங்கினாலும்
3,000 இந்திய ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றாலும் கலந்து
கொண்டேன். விழா மிகச் சிறப்பாக இருந்தது. சுமார் ஆயிரம் பேர் கலந்து
கொண்டிருக்கக் கூடும். அனைவருக்கும் காலை ‘டிஃபன்’ மதியம் உணவு
, மாலை தேநீர் என்று சிறப்பான ஏற்பாடுகள்

நாள் முழுக்க விளையாட்டுப் போட்டிகள் முதலானவை. பரிசு
வழங்கல், அதிர்ஷ்டச் சீட்டு குலுக்கல் அதில் விலை மதிப்புள்ள
பரிசுகள் என்று ஜமாய்த்தார்கள்.

கூட்டம் – சொற்பொழிவுகள் என்று எதுவுமில்லை. என்னுடைய
‘தவ்பா’ பாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. இது ஒரு மறக்க
முடியாத நிகழ்வு.

அன்புடன்  சாத். அப்.ஜப்பார்

03.12.2012
Sathankulam Abdul Jabbar,

Blog:http://sathankulamjabbar.blogspot.in/
Facebook:http://www.facebook.com/sathankulamabduljabbar

 

abjabin@gmail.com

Leave a Reply

TOP