துபாய் ஈமான் அமைப்பு த‌மிழ‌க‌ கல்லூரி நிர்வாகிக‌ளுக்கு அளித்த வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

by / Thursday, 01 August 2013 / Published in வாழ்த்துரை

.7
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து கல்லூரி

 

 

 

 

 

 

 

 

 

நிர்வாக‌க்குழுவின‌ருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியினை 25.12.2012 செவ்வாய்க்கிழ‌மை மாலை லேண்ட்மார்க் ஹோட்ட‌ல் கிராண்டில் வெகு சிற‌ப்புற‌ ந‌ட‌த்திய‌து.

ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் மைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான் இறைய‌ருட்பா பாடினார்.
குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி த‌ன‌து த‌லைமையுரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ப‌ட்டிய‌லிட்டார். க‌ல்வி உத‌வித்தொகை வ‌ழ‌ங்கும் ப‌ணியில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி நிர்வாக‌த்தின‌ர் அளித்து வ‌ரும் அனைத்து வித‌ ஆத‌ர‌வுக்கும் ந‌ன்றிக‌ளையும் பாராட்டுக்க‌ளையும் தெரிவித்துக் கொண்டார். க‌ல்விக்குழுச் செய‌லாள‌ர் ஹிதாய‌த்துல்லா வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.
துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். ஈமான் அமைப்பு இந்திய‌ க‌ன்சுலேட்டுட‌ன் இணைந்து மேற்கொண்டு வ‌ரும் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ள் குறித்தும், இன‌ம், ம‌த‌ம், மொழி வேறுபாடின்றி ஆற்றிவ‌ரும் சேவைக‌ள் குறித்தும் விவ‌ரித்தார்.
திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி தாளாள‌ர் முனைவ‌ர் ஏ.கே. காஜா ந‌ஜீமுதீன் சாஹிப், துணைச் செய‌லாள‌ர் எம்.ஜே. ஜமால் முஹ‌ம்ம‌து சாஹிப், முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஆர். காத‌ர் முஹைதீன் சாஹிப், ஜமால் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இய‌க்குந‌ர் முனைவ‌ர் கே. அப்துஸ் ஸ‌ம‌து, சுய‌நிதிப்பிரிவு இய‌க்குந‌ர் அப்துல் காத‌ர் நிஹால் ஆகியோர் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
முனைவ‌ர் ப‌ட்ட‌ம் பெற்ற‌ தாளாள‌ருக்கும், க‌ல்லூரிக்கும் ஈமான் அமைப்பின் நினைவுப் ப‌ரிசினை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ துணைப் பொது மேலாள‌ர் அல்ஹாஜ் ஹ‌மீது கான் வ‌ழ‌ங்கினார்.
திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி தாளாள‌ர் முனைவ‌ர் ஏ.கே. காஜா ந‌ஜீமுதீன் சாஹிப் த‌ன‌து ஏற்புரையில் ச‌முதாய‌ப் ப‌ணியில் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்துக் கொண்டுள்ள‌ ஈமான் அமைப்புட‌ன் இணைந்து செய‌லாற்றுவ‌து பெருமித‌ம் கொள்ள‌ வைப்ப‌தாக‌க் குறிப்பிட்டார். முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஆர். காத‌ர் முஹைதீன் ஈமான் அமைப்பின் க‌ல்விச் சேவைக‌ள் ஏழை எளிய‌ மாண‌வ‌ர்க‌ளின் உய‌ர் க‌ல்விக்கு ஒரு உந்து ச‌க்தியாக‌ திக‌ழ்கிற‌து என்றார்.
ம‌க்க‌ள் தொட‌ர்பு ம‌ற்றும் ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார். துஆவுட‌ன் நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து.
ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ள் அஹ‌ம‌து முஹைதீன், முதுவை ஹிதாய‌த், ஹ‌மீது யாசின், சாதிக் பாட்சா, முஹைதீன், முஸ்தபா, சாகுல், ச‌ர்புதீன், ஹ‌பிபுல்லா, அப்துல் ர‌சாக், முபார‌க் அலி உள்ளிட்ட‌ நிர்வாகக் குழுவின‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

TOP