மதங்களுக்கு அப்பால் மனிதற்காய் உதவிக்கரம் நீட்டும் துபை ஈமான் கல்சுரல் சென்ட்டர் அமைப்பு

by / Wednesday, 31 December 2014 / Published in நிகழ்வுகள்

மதங்களுக்கு அப்பால் மனிதற்காய் உதவிக்கரம் நீட்டும் துபை ஈமான் கல்சுரல் சென்ட்டர் அமைப்பு

மதமாச்சரியங்கள் கடந்து மனிதமே புனிதமென கருதி மனிதத்திற்காய் மனநிறைவாக கரிசன உணர்வோடு, துபையில்செயல்பட்டுவரும் ஈமான் அமைப்பின் மனித நேயப்பணிகள் எல்லோரும் அறிந்த போற்றத்தக்க ஒன்று. அந்தவகையில்தான் சமீபத்தில் மனதை நெகிழவைக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதை அறிந்தால் மனிதநேயமுள்ள எல்லாஉள்ளங்களும் பெருமகிழ்ச்சி அடையும் என்பது திண்ணம்.

சாமிதுரை என்கிற துரைவீராசாமி பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்தவர், இவர் பணி நிமித்தமாகஅமீரகத்தின் துபைக்கு வந்து கடந்த ஏழு வருடங்களாக அங்கேயே வசித்து வந்தவர். அந்த ஏழு வருடத்தில், கடந்த ஐந்துவருடங்களாக முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாது தலைமறைவாக இருந்து வேலைசெய்து வந்தார்.இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக இவரை தெரிந்தவர்கள் துபையின் ஷேக் ராசித்மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போய்விட்டனர், பிறகு மோசமான உடல்நிலை காரணமாக வீராசாமி மூன்று மாதங்கள் தொடர்ந்து சுயநினைவில்லாத கோமா நிலையிலேயே ஆழ்ந்துவிட்டார், பின்னர் மருத்துவமனையின்இடைவிடாத சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் மீண்ட அவரை வந்து பார்க்கவோ, நலம் விசாரிக்கவோ அல்லது அவரதுஊருக்கு அழைத்துச் சென்று அவரது சொந்தபந்தங்களோடு சேர்க்கவோ கூட யாரும் இல்லாத நிலையில் மேலும்இரண்டு மாதஙக்ள் ஓடிவிட்டது. இதனால் வீராசாமி உடல்நிலை பாதிப்போடு மிகுந்த மனவேதனைக்கும் உள்ளானார்.

இந்நிலையில் தான் விராசாமி துன்பப்படும் செய்தியறிந்த நம் தமிழ் சகோதரகள் இது போன்றவர்களுக்கு உடனேகைகொடுக்கும் அமைப்பான துபையின் “ஈமான்” இருக்கிறதே என அவர்கள் ஈமான் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள,ஈமானின் நிர்வாகிகளான பொதுச் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி மற்றும் துணை பொதுச் செயலாளர்திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அவர்கள் தாயுள்ளத்தோடு ஷேக் ராஷித் மருத்துவமனைக்கு உடனே விரைந்துநோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுவரும் வீராசாமியை கண்டு ஆருதல் கூறியும், நிலைமையை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆலோசித்தும் அவருக்கு உதவும் முயற்சியினை ஆரம்பித்தனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட நோயாளி வீராசாமிக்கு மீண்டும் தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டிஇருந்ததால் அதற்கும் உதவியாக நின்று அதுவும் வெற்றிகரமாக முடிய இறுதியில் ஈமான் சங்கத்தினர் துபைக்குபிழைக்க வழித்தேடி வந்து நோயின் பிடியில் மாட்டிக்கொண்டு கடந்த ஐந்து மாதமாக நோயினால் மிகுந்தமனஉளைச்சலுக்கும், உடல் பலகீனத்திற்கும் ஆளான ஏழை வீராசாமியை அவரது சொந்த ஊருக்கே அழைத்துச்செல்லதுரித ஏற்பாடுகளை இந்திய தூதரகத்தின் மூலம் செய்து ஈமானின் துணைபொதுச்செயலாளர் திருப்பனந்தாள்முஹம்மது தாஹா அவர்கள் வீராசாமியை மிக அரவணைப்போடு விமானம் மூலம் தாயகம்

அழைத்துச்சென்று அவரதுதாயார் மற்றும் தம்பியிடம் மிக பத்திரமாக ஒப்படைத்து வந்துள்ளார். மேலும் அத்தோடு இலவசமாக அவருக்கான சக்கரநாற்காலியையும் துபையின் திர்ஹம் ஆயிரத்து ஐநூரையும் (இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரம்) சேர்ந்த்துக் கொடுக்கபெற்றுக்கொண்ட வீராசாமியின் தாயாரும், தம்பியும் நெகிழ்ந்து போயினர்.

இது நாள்வரை தனது மகனைப் பற்றி ஒரு தகவலும் அறியாத பெற்ற தாயும், அவரது சகோதரரும் தங்களின் வீராசாமியைமதங்கள் கடந்து பேரன்போடு உதவிக்கரம் கொடுத்து மீட்டு வந்த துபையின் ஈமான் சங்கத்தினருக்கு கண்ணீரோடுநன்றியை தெரிவித்தனர். இது தொடர்பாக ஈமானின் நிர்வாகிகள் கூறும்போது ஆதரவற்ற நோயாளி வீராசாமிக்கு ஐந்துமாதங்கள் வரை சிறப்பான சிகிச்சையை இலவசமாக செய்து கொடுத்த ஷேக் ராஷித் மருத்துவமனை நிர்வாகமும்,அவரை ஊர்வரை கொண்டு எல்லா வகை ஆதரவையும் அளித்த துபை அரசாங்கமும் இலவசமாக விமானம் மூலம்கொண்டுசெல்ல உதவிய இந்திய தூதரகமும் தான் மிகுந்த நன்றிக்கு உரித்தானவர்கள் இவர்களின் ஒத்துழைப்போடு தான்ஈமான் இந்த நற்செயலை செய்யமுடிந்தது என்று பெருமிதத்தோடு தெரிவித்தனர்.

Leave a Reply

TOP