துபாய் ஈமான் அமைப்பின் புரவலர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் வஃபாத்து

துபாய் ஈமான் அமைப்பின் புரவலர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் வஃபாத்து

துபாய் ஈமான் அமைப்பின் புரவலரும், ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் நிறுவனருமான அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் இன்று 07.01.2015 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா நாளை 08.01.2015 வியாழக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் 12.30 மணியளவில் வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.

அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் மறைவுக்கு ஈமான் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

கல்வியாளராக, தொழிலதிபராக, பல்வேறு சேவை நிறுவனங்களை நடத்தி வந்தவருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான், சென்னையில் உள்ள பிரபல கிரசென்ட் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஆவார். தமிழகத்தில் பொறியியல் கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1927ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் பிறந்தவரான அப்துர் ரஹ்மான், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொறியியல் கல்லூரிகள், பிற கல்லூரிகள், பள்ளிகளை நிறுவிய கல்வித்துறையில் பெரும் சேவை புரிந்தவர். அதேபோல மருத்துவமனைகள் பலவற்றையும் இவர் நிறுவியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் துபாயிலும் தனது தொழில் பங்களிப்பை அளித்தவர் அப்துர் ரஹ்மான். துபாயின் மிகப் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர். அந்த குழுமத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதி கழகம் மூலமாக பல்வேறு தான தர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார் பி.எஸ். அப்துர் ரஹ்மான்.

குறிப்பு :

துபாய் ஈமான் அமைப்பின் புரவலர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துஆ மஜ்லிஸ் மற்றும் இரங்கல் கூட்டம் 11.01.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் இரவு 8 மணிக்கு அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ஈமான் அமைப்பின் சார்பில் நடைபெறும்

Leave a Reply

TOP