துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு
நிகழ்ச்சி 13.07.2015 திங்கட்கிழமை இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் 10.30
மணியளவில் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜிதின் கதீப் மற்றும்
தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி ஏ. முஹம்மது
முஸ்தபா மஸ்லஹி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.

பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும்
அனைவருக்கும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு 050 467 43 99 / 050 51 96 433

Leave a Reply

TOP