முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு ஈமான் அமைப்பு இரங்கல்!

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு ஈமான் அமைப்பு இரங்கல்!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தி ஒட்டு
மொத்த இந்திய மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

நமது நாட்டில் எத்தனையோ குடியரசு தலைவர்கள் அவர்களது பதவி காலத்தில் தங்களது
குடும்ப உறுப்பினர்கள்,உறவுகள்,நண்பர்கள் வட்டமென ஒரு பெரும்படையுடன்
ராஷ்ட்ரபதி மாளிகையில் வருட கணக்கில் தங்கி அரசு பணத்தில் சுகபோகமாக வாழ்ந்த
நிலையில் அப்துல் கலாம் மட்டுமே தனியொரு ஆளாக தங்கியிருந்து தமது பதவி காலத்தை
நேர்மையாக முடித்தார்.

தமது பதவியேற்பு விழாவுக்கு டெல்லி வருகை தந்த தமது சகோதரர் மற்றும் அவரது பிள்ளைகள்,உறவுகளுக்கான செலவு முழுவதையும் தமது சொந்த பணத்தில் செலவழித்த நேர்மைக்கு சொந்தக்காரர் அப்துல் கலாம் மட்டுமே.

மிகவும் எளிமையாகவும்,அனைவரிடத்திலும் அழகிய பண்போடும் பழக கூடிய அப்துல் கலாம் தமது வாழ்வின் பெரும் பங்களிப்பை மாணவர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக செலவழித்தார்.

ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் கூட ஆடம்பர பங்களாவில் வாழும் இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல் கலாமின் குடும்பம் இன்றும் ராமேஸ்வரத்தில் மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்து வருவதே அப்துல் கலாமின் நேர்மைக்குரிய அடையாளமாகும்.

பெரியவர் அப்துல் கலாமின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஈமான் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

Leave a Reply

TOP