ஈமான் மற்றும் இந்தியா கிளப் சார்பில் தொழிலாளர்களுக்கான‌ இரவு நேர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் ,இந்தியா கிளப்சமூக நல அமைப்புடன் பிரபலமான இந்தியா கிளப் உள் விளையாட்டு அரங்கில் மின்னொளி வெளிச்சத்தில் தொழிலாளர்கள் பங்கேற்ற இரவு நேர உள் அரங்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

டைனாட்ரேட் நிறுவனம், ரம்மர் நிறுவனம், யங் மிங் நிறுவனம், ஒபல் சிப்பிங் நிறுவனம், எல்க்ட்ரோ பிளஸ் நிறுவனம், ஷம்ஸ் அல் ஜாப் நிறுவனம், பவர் குரூப் நிறுவனம் ,துபாய் பிரிண்டிங் பிரஸ் நிறுவன உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர் பெருமக்கள் கலந்து கொண்டனர்

இதில் யங்மிங், ஷம்ஸ் அல் ஜாப் நிறுவனம், டைனா ட்ரேட், ரம்மர் குரூப் ஆகிய அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
தொழிலாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இப்போட்டிகளில் பங்கேற்றனர்

இத்தொடரில் அடுத்த வாரம் வியாழன் இரவு அரை இறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை ஈமான் சார்பில் பொது செயலாளர் லியாக்கத் அலி தலைமையில் துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்கள் ஹமீது யாசின், அப்துல் ரசாக், சாதிக் ,அலுவலக மேலாளர் சமீம், செயற்குழு உறுப்பினர்கள் அப்தாஹிர்,அலி உள்ளிட்டோரும் இந்தியா கிளப் சார்பில் மேலாளர் சைமன், அதிகாரி பிரசாந்த் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைவருக்கு இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

 

Leave a Reply

TOP