ஈமான் சமூக நல அமைப்பு சார்பில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்ட படிப்புக்கான உதவி தொகை

 

ஈமான் சமூக நல அமைப்பு சார்பில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்ட படிப்புக்கான உதவி தொகை

ஈமான் சமூக நல அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் 100க்க்கும் மேற்பட்ட எளிய மாணவ மாணவியருக்கான‌ பொறியியல் ,மருத்துவம், கலை மற்றும் அறிவியல் பட்டபடிப்புகளுக்கான முழு செலவுககளில் 50 சதவீத பங்களிப்பு ஏற்று கொள்ளப்பட்டு அதற்கான‌ உதவி தொகை வழங்கப்படுகிறது.இவ்வமைப்பின் சார்பில் கல்வி உதவி தொகை பெற்று 1000த்திற்கு மேற்பட்டோர் பட்டதாரியாக உருவாகியுள்ளனர்

இவ்வருடமும் இதற்கான நிகழ்ச்சி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் தமிழகம்  முழுவதுமிருந்து வருகை தந்திருந்தனர்

நிகழ்ச்சியில் ஈமான பொது செயலாளர் லியாக்கத் அலி தலைமை வகித்து  வரவேற்புரை வழங்கினார். ஈமான் துணை பொது செயலாளர் தாஹா தொகுத்து வழங்கினார். ஈமான் செய்து கல்வி பணி குறித்து கல்விக்குழு செயலாளர் அப்துல் ரசாக் விரிவாக எடுத்துரைத்தார். மாணவ மாணவியருக்கு உதவி தொகை வழங்குவது குறித்து கல்விகுழு உதவி செயலாளர் ஜாபர் ஒருங்கினைப்பை செய்திருந்தார்.

மேலும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான டாக்டர் ஏகே காஜா நஜிமுதீன், கல்லூரி முதல்வர் டாக்டர் முஹம்மது சாலிக் ,துணை முதல்வர் டாக்டர் முஹம்மது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வர் டாக்டர் இஸ்மாயில் முஹைதீன், பேராசிரியர் டாக்டர் முஹம்மது பாசில், ஹாஸ்டல் நிர்வாகம், டாக்டர் எம் எம் சாஹுல் ஹமீது ,டாக்டர் அய்மான் கல்லூரி தாளாளர்,திருச்சி, டாக்டர் முஹம்மது சம்சுதீன் ,டாக்டர் ஜோசப் ஜெரால்ட், டாக்டர் முஹம்மது இஸ்மாயில் ஹசனி, டாக்டர் செய்யது முஹம்மது, டாக்டர் காதர் முஹைதீன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை வழங்கினர்

Leave a Reply

TOP