துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தி வ‌ரும் இஃப்தார் எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்ச்சி

by / Tuesday, 16 July 2013 / Published in IFTHAR 2011, நிகழ்வுகள், ரமலான்

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) இஃப்தார்
எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்வினை துபாய் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் (
குவைத் ப‌ள்ளி ) ர‌மலான் மாத‌ம் முழுவ‌தும் த‌மிழ‌க‌ நோன்புக்
க‌ஞ்சியுட‌ன் வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.

இது குறித்து ஈமான் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி
தெரிவிப்ப‌தாவ‌து : துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வு க‌ட‌ந்த‌
இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து. ஆர‌ம்ப‌த்தில்
சிறிய‌ அள‌வில் ஆர‌ம்பித்து இன்று சுமார் மூவாயிர‌த்துக்கும்
மேற்ப‌ட்டோருக்கு தின‌மும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியை வ‌ழ‌ங்கி
வ‌ருகிற‌து. நோன்புக் க‌ஞ்சியுட‌ன் ச‌மோசா, ஆர‌ஞ்சு, குளிர்ந்த‌ பான‌ம்,
த‌ண்ணீர், பேரிச்ச‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இத்த‌கைய‌ மாபெரும் நிக‌ழ்வு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் சைய‌து
எம். ஸ‌லாஹுத்தீன், க‌ல்விக்குழுத் த‌லைவ‌ர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.
ஹ‌பிபுல்லாஹ் ஆகியோர‌து வ‌ழிகாட்டுத‌லுட‌ன் பொதுச்செய‌லாள‌ர் ஏ.
லியாக்க‌த் அலி, ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா,
விழாக்குழு செய‌லாள‌ர் ய‌ஹ்யா முஹ்யித்தீன், ஊடக‌த்துறை செய‌லாள‌ர்
முதுவை ஹிதாய‌த், க‌ல்விக்குழு செய‌லாள‌ர் ஹிதாய‌த்துல்லா, அலுவ‌ல‌க‌
மேலாள‌ர் ஏ. ஹ‌மீது யாசின், ப‌டேஷா ப‌ஷீர், இல்யாஸ், ஷ‌ர்புதீன், ஷாகுல்
ஹ‌மீது, உஸ்மான், ஜ‌மால் முஹ‌ம்ம‌து உள்ளிட்ட‌ நிர்வாகக் குழு
உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் ஒத்துழைப்புட‌ன்
ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இந்நிக‌ழ்வில் ப‌ங்கேற்ற‌ சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌த்தின் கோவையைச்
சேர்ந்த‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் வி. ந‌ந்த‌குமார் அவ‌ர்க‌ள் தெரிவித்தாவ‌து
இஃப்தார் நிக‌ழ்வில் ஒரு பூகோள‌ கிராம‌த்தைப் பார்ப்ப‌து போன்ற‌ ஒரு
பிர‌மிப்பினை ஏற்ப‌டுத்துவ‌தாக‌க் குறிப்பிட்டார். இது த‌ன‌து வாழ்நாளில்
ம‌ற‌க்க‌ முடியாத‌ நிக‌ழ்வு என‌க் கூறிய‌துட‌ன் இந்தியா அல்லாத‌ பிறிதொரு
நாட்டில் சேவை ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ஈமான்
அமைப்பின‌ரின் சேவையினைப் பாராட்டினார்.

இப்ப‌ணியில் ஈடுப‌ட‌ விரும்புவோர் 050 4674399 / 050 5196433 எனும்
அலைபேசி எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

Leave a Reply

TOP