துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் ஈமான் ச‌ங்க‌த்தின் 34 ஆம் ஆண்டு விழா

துபாய் : துபாய் ஈமான் ச‌ங்க‌த்தின் 34 ஆம் ஆண்டு விழா ம‌ற்றும் அமீரக‌த்தின் 38 ஆவ‌து தேசிய‌ தின‌ம் 02.12.2009 புத‌ன்கிழ‌மை காலை முத‌ல் மாலை வ‌ரை ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளுட‌ன் வெகு உற்சாக‌மாக‌ கொண்டாட‌ப்ப‌ட்ட‌து.

விழாவிற்கு ஈமான் ச‌ங்க‌த்தின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம் த‌லைமை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌கத்தின் இல‌ங்கை பொறுப்பாள‌ர் க‌விஞ‌ர் ஜின்னாஹ் ஷ‌ர்புதீன் க‌ல‌ந்து கொண்டார். அவ‌ர் த‌ன‌து உரையில் அமீர‌க‌த்தின் தேசிய‌ தின‌த்தில் மிகுந்த‌ உற்சாக‌த்துட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ அனைவ‌ரையும் பாராட்டினார்.

ஈடிஏ அஸ்கான் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை இய‌க்குந‌ர் எம். அக்ப‌ர் கான் ஈமான் அமைப்பின் அனைத்து ப‌ணிக‌ளிலும் த‌ங்க‌ளை ஈடுப‌டுத்திக் கொள்ள‌ அனைவ‌ரையும் கேட்டுக் கொண்டார். மேலும் விளையாட்டுப் போட்டிக‌ள் ம‌ற்றும் அதிர்ஷ்ட‌சாலி குலுக்க‌லில் தேர்வு பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கினார்.

ஆலியா முஹ‌ம்ம‌து வ‌ணிக‌ நிறுவ‌ன‌ இய‌க்குந‌ர் நாகூர் ஷேக் முஹ‌ம்ம‌து வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ராய‌ல் செஃப் அரிசியினை ப‌ரிசாக‌ வ‌ழ‌ங்கினார். டாக்ட‌ர் ப‌ர்வீன் பானு, திரும‌தி ஜின்னாஹ் ஷ‌ர்புத்தீன் ம‌ற்றும் ப‌ல‌ர் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கின‌ர்.

பெரிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்றும் சிறுவ‌ர்க‌ளுக்கு ந‌டைபெற்ற‌ ப‌ல்வேறு போட்டிக‌ளி வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ளுக்கும் ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌ன‌. அனைவ‌ருக்கும் ம‌திய‌ உண‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

பொருளாள‌ர் மீரா முஹைதீன் ந‌ன்றி கூறினார். விழாவுக்கான‌ ஏற்பாடுக‌ளை ஈமான் ச‌ங்க‌ ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த்,
ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் ஏ. ஹ‌மீது யாசின், க‌ல்விச்செய‌லாளர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ், த‌ணிக்க‌யாள‌ர் எஸ்.எம். ஃபாரூக், இஸ்மாயில் ஹாஜியார், அபுல் ஹ‌ஸ‌ன், காய‌ல் ஈஸா, குத்தால‌ம் அஷ்ர‌ஃப் அலி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் செய்திருந்த‌ன‌ர்.

த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் குடும்ப‌த்துட‌ன் இந்நிக‌ழ்வில் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Leave a Reply

TOP