துபாய் ஈமான் இஃப்தார் நிக‌ழ்வில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ப‌ங்கேற்பு

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பின் சார்பில் வ‌ருட‌ந்தோறும் ர‌ம‌லான் மாத‌த்தில் துபாய் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி )நோன்பாளிக‌ளுக்கு சுவைமிக்க‌ த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.

19.08.2010 அன்று துபாய் இந்திய‌ கன்ச‌ல் ஜென‌ர‌ல் திருமிகு. ச‌ஞ்சீவ் வ‌ர்மா த‌ன‌து துணைவியாருட‌ன் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் இஃப்தார் ப‌ணிக‌ளைப் பார்வையிட்டார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் ப‌ணிக‌ளை பாராட்டிய‌துட‌ன் இத‌ற்காக‌ சேவை ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் நிர்வாகிக‌ளையும் பாராட்டினார்.

க‌ன்ச‌ல் ஜென‌ர‌லை பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமையிலான‌ குழுவின‌ர் வ‌ர‌வெற்ற‌ன‌ர்.

நிக‌ழ்வில் இந்திய‌ன் க‌ன்யூனிட்டி வெல்பேர் க‌மிட்டி ஒருங்கிணைப்பாள‌ர் கே. குமார், ஈடிஏ ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம். அக்ப‌ர்கான், ஆலியா டிரேடிங் நிர்வாக‌ இய‌க்குந‌ர் ஷேக் தாவூத், முஹ‌ம்ம‌து மீரான், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி சுரேஷ், ஈமான் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

 

 

2

3 4 5 6

Leave a Reply

TOP