துபாயில் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவருக்கு வ‌ர‌வேற்பு

துபாயில் ஈமான் அமைப்பில் த‌மிழ‌க‌ பிர‌முக‌ருக்கு வ‌ர‌வேற்பு

துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 28.11.2011 திங்க‌ட்கிழ‌மை அஸ்கான் ச‌முதாயக் கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து.

துவ‌க்க‌மாக‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை தாங்கினார். துணைத்த‌லைவ‌ர் கூத்த‌ந‌ல்லூர் அஹ‌ம‌து முஹைதீன் முன்னிலை வ‌கித்தார். திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹைதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். அமீர‌க‌த்தின் 40 ஆவ‌து தேசிய‌ தின‌த்தையும், ஈமான் 36 ஆம் ஆண்டு விழாவினையும் சிற‌ப்புற‌ ந‌ட‌த்துவ‌து குறித்து விவ‌ரித்தார்.

சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ ப‌ங்கேற்ற‌ தாய‌க‌த்திலிருந்து வ‌ருகை புரிந்துள்ள‌ திருப்ப‌ன‌ந்தாள் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஷ‌ர்புதீனுக்கு ஈமான் துணைத்த‌லைவ‌ர் அஹ‌ம‌து முஹைதீன் பொன்னாடை அணிவித்து கௌர‌வித்தார்.

நிக‌ழ்வில் ஈமான் நிர்வாகிக‌ள் காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாய‌த், கீழை ஹமீது யாசின், ப‌டேஷா ப‌ஷீர் ம‌ற்றும் செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ள் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.

 

IMG_7980-150x150

 IMG_7983-150x150

 

IMG_7984-150x150

Leave a Reply

TOP