துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் ஈமான் ச‌ங்க‌த்தின் 36 ஆம் ஆண்டு விழா

துபாய் : துபாய் ஈமான் ச‌ங்க‌த்தின் 36 ஆம் ஆண்டு விழா ம‌ற்றும் அமீரக‌த்தின் 40 ஆவ‌து தேசிய‌ தின‌ விழா 02.12.2011 வெள்ளிக் கிழ‌மை காலை முத‌ல் மாலை வ‌ரை ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளுட‌ன் வெகு உற்சாக‌மாக‌ கொண்டாட‌ப்ப‌ட்ட‌து.

விழாவிற்கு ஈமான் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் சைய‌த் எம் ஸ‌லாஹுத்தீன் த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ ஈமான் அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய‌ கீத‌ம் பாடினார். குழ‌ந்தைக‌ளின் அணிவ‌குப்பும், அமீர‌க‌ தேசிய‌ கீத‌மும் பாட‌ப்ப‌ட்ட‌து.

பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

அல்ஹாஜ் சைய‌த் எம் ஸ‌லாஹுத்தீன் த‌ன‌து தலைமையுரையில் ஈமானுடைய 36 வது ஆண்டு விழா என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஈமான் ச‌ங்க‌த்திற்குத்தான் 36 ஆம் ஆண்டு. ஆனால் ஈமானுக்கு வயது இதுதான் என்று யாராலும் கூற முடியாது. உலகம் தோன்றிய காலம் முதல் ஈமான் உள்ளது. ஈமான் ச‌ங்க‌த்தின் சமுதாய செயல்பாடுகளில் நாம் ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும், தன்னுடைய கடந்த கால அனுபவங்களையும் அவர் இன்புற பகிர்ந்து கொண்டார்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ரஹ்மான் க‌ல‌ந்து கொண்டார். அவ‌ர் த‌ன‌து வாழ்த்துரையில் அமீர‌க‌த்தின் தேசிய‌ தின‌த்தில் மிகுந்த‌ உற்சாக‌த்துட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ அனைவ‌ரையும் பாராட்டினார். மேலும் அவர் தன்னுடைய உரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுக்காகவும், முஸ்லீம்களுக்கான வழிபாட்டுத்தளங்களை ஒவ்வொரு விமான நிலையங்களிலும் நிறுவுவது சம்பந்தமாகவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசி வருவதாகவும், தன்னுடைய முயற்சி வெற்றி பெறும் என்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஈமானில் தான் தற்போதும் உதவித் தலைவராக இருப்பது குறித்து பெருமிதம் கொண்டார். ஈமான் அமைப்பின் அனைத்து ப‌ணிக‌ளிலும் ஒவ்வொருவ‌ரும் த‌ங்க‌ளை ஈடுப‌டுத்திக் கொள்ள‌ அனைவ‌ரையும் கேட்டுக் கொண்டார்.

மேலும் விளையாட்டுப் போட்டிக‌ள் ம‌ற்றும் அதிர்ஷ்ட‌சாலி குலுக்க‌லில் தேர்வு பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கினார்.

சிறப்பபு பரிசான ஜெட் ஏர்வேஸ் நிறுவ‌ன‌ம் வழங்கிய சென்னை ‍துபாய் சென்னை இலவச ப‌ய‌ண‌ச் சீட்டை வி.களத்தூர் மஹஸர் அலி பெற்றார். ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌த்தின் 32 இஞ்ச் எல்சிடி க‌ல‌ர் டிவியினை ப‌ட்டுசாமி பெற்றார்.

சென்னை தானிஷ் அஹ‌ம‌து பொறியியல் கல்லூரி தாளாள‌ர் காத‌ர்ஷாவிற்கு நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துல் ரஹ்மான் நினைவுப் பரிசை வ‌ழ‌ங்கி கௌர‌வித்தார்.

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் குடும்ப‌த்துட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை ஈமான் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, இணைப் பொதுச்செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையிலான‌ குழுவின‌ர் சிற‌ப்புற‌ செய்திருந்த‌ன‌ர்.

ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ம், ஜெட் ஏர்வேய்ஸ், ஆலியா டிரேடிங், மொலினா, இந்தியா சில்க் ஹ‌வுஸ், கார்ஸ் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிறுவ‌ன‌ங்க‌ள் அணுச‌ர‌னை வ‌ழ‌ங்கியிருந்த‌ன‌.

[nggallery id=6]

Leave a Reply

TOP