கீழ‌க்க‌ரையில் ந‌டைபெற்ற‌ ஆற்ற‌ல் மிகு ஹாபிழ் யார் ? நிக‌ழ்ச்சிக்கு ஈமான் வாழ்த்து

கீழ‌க்க‌ரை : கீழ‌க்க‌ரையில் க‌ண்ணாடி வாப்பா ஹ‌மீதிய்யா அரபிக்க‌ல்லூரி, அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ர‌ஹ்மான் ஆகியோர் இணைந்து 29.12.2011 வியாழ‌ன் காலை கீழ‌க்க‌ரை க‌ண்ணாடி வாப்பா அர‌ங்கில் மூன் டிவியின் ஆற்ற‌ல் மிகு ஹாபிழ் யார் ? எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

 

இந்நிக‌ழ்வில் துபை வ‌க்ஃப் வாரிய‌த்தின் துணை இய‌க்குந‌ர் ஜென‌ர‌ல் உம‌ர் எம் அல் க‌த்தீப் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்றார்.

 

ஈமான் அமைப்பின் த‌லைவ‌ரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ மேலாண்மை இய‌க்குந‌ர் அல்ஹாஜ் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன் அவ‌ர்க‌ள் ப‌ரிசு வ‌ழ‌ங்கி உரை நிக‌ழ்த்தினார். ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இய‌க்குந‌ர் அல்ஹாஜ் ஆரிஃப் புஹாரி ர‌ஹ்மான் ஹீல்டுக‌ளை வ‌ழ‌ங்கினார்.

 

ச‌முதாய‌ப் பிர‌முக‌ர்க‌ள் ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ இந்நிக‌ழ்வில் ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி, துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, விழாக்குழு செய‌லாள‌ர் கீழை ஏ ஹ‌மீது யாசின் உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

 

மேலும் விழாவினை வாழ்த்தி கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் பேன‌ரும் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து.

 

100_46251-300x225

Leave a Reply

TOP